திருப்போரூர்-நெம்மேலி பாலத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் இறுதி கட்ட ஆய்வு
5/14/2015 2:20:10 PM
மாமல்லபுரம்: திருப்போரூர்-நெம்மேலி பகுதிகளுக்கு இடையே. பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் மீது பாலம் கட்டும் பணி கடந்த 2008-ல் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பால பணிகளின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து நேற்று மாலை செங்கல்பட்டு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், தரக்கட்டுப்பாடு பிரிவு கோட்ட பொறியாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள பாலம், 450 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட சாலை ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.பாலத்தின் இறுதிக் கட்ட பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்குமாறு ஒப்பந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சிவசேனா உடனிருந்தார்.