இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செக்ஸ் டார்ச்சரால் பள்ளி ஆசிரியை தற்கொலை ஹெச்.எம். மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரி காலில் விழுந்து கணவர் கதறல்

5/13/2015 2:42:07 PM
அதிமுக ஆட்சியில் முறைகேடு புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து: ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்

புதுக்கோட்டை: தலைமை ஆசிரியர் கொடுத்த செக்ஸ் டார்ச்சர் காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்தார். இதற்கு காரணமான தலைமை ஆசிரியை கண்டிக்கக்கோரி அதிகாரி காலில் விழுந்து கணவர் கதறி அழுதார்.புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஆசிரியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தலைமையாசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் தெற்கு ராயபட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். பின் எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தலைமையாசிரியர் மதிவாணன், உடன் பணியாற்றிவரும் ஆசிரியைகளிடமும், பெண் ஊழியர்களிடமும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும், அவர்களை தொட்டு சில்மிஷம் செய்தும், பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக வந்த புகாரால் அவரை, கிராம மக்கள் பலமுறை கண்டித்துள்ளோம்.

 இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி பாலியல் தொல்லை தாங்கமுடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தலைமை ஆசிரியரே காரணம். இவர் பணிபுரிந்த பல இடங்களில் இதேபோல் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே மதிவாணனை கைது செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ‘’சம்பவம் தொடர்பாக விசாரித்து மதிவாணன் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதுபற்றி கணேஷ்நகர் போலீசார்,  தலைமையாசிரியரிடம் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.காலில் விழுந்து கதறிய கணவர்: ஆசிரியை புவனேஸ்வரி சாவிற்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுக்க புதுக்கோட்டை சிஇஓ அலுவலகம் வந்த புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் உறவினர்கள் மதிய உணவுக்கு பிறகு அலுவலகத்திற்கு வந்த சிஇஓ அருள்முருகனின் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை



  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]