இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்

5/8/2025 3:34:27 PM
நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு

கூடலூர்: உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கேரள நீர்வளத்துறை மறுப்பது குறித்து துணைக்குழு கூட்டத்தில் கேரள அதிகாரிகளிடம், தமிழக  பிரதிநிதிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த ஆண்டு மே 7ம் தேதி உத்தரவிட்ட  உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் கொண்ட  கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரியாறு அணைக்கு மின்சாரம், வல்லக்கடவு பாதை  சீரமைப்பு, பேபி அணை சீரமைப்பு போன்ற பணிகளை செய்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்குழுவிற்கு உதவியாக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில்  தமிழகத்தின் சார்பில் பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன்  செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல் மற்றும் உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் உள்ளனர்.கடந்த 3 மாதங்களுக்குப்பின் துணைக்குழுவினர் நேற்று பெரியாறு  அணையை பார்வையிட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, கசிவுநீர் போன்றவற்றை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்த மாலையில் குமுளியில் உள்ள  கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்,

வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்குச் செல்லும் பாதை சீரமைப்பு. பேபி அணையை ரூ.20 கோடி செலவில் பலப்படுத்துவது. பேபி அணையைச்சுற்றி  இருக்கும் 23 மரங்களை வெட்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக பொதுப்பணித்துறை ஆன்லைனில் அனுமதி கேட்பது. தேக்கடியில்  உள்ள தமிழக ஆய்வு மாளிகையில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க அனுமதி கேட்டு கேரள வனத்துறை மறுத்தது.தமிழக பொதுப்பணித்துறையினரின் புதிய  படகை இயக்க கேரள வனத்துறை அனுமதி மறுப்பது போன்றவைகள் குறித்து பேசப்பட்டது,இதில் வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு செல்லும்  பாதையை முழுமையாக சீரமைக்க அனுமதிக்க முடியாது என கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்காணிப்பு குழுவின் தீர்மானத்தை  நடைமுறைப்படுத்த மறுக்கும் கேரள அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து  குழுத்தலைவர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் மேற்கண்ட ஆலோசனைகள் குறித்தும், ஆய்வுகள் குறித்தும் கண்காணிப்பு குழுவிடம் தெரிவித்து அவர்கள் மூலம் முடிவு  செய்யப்படும் என்றார்.

மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



  • குடிபோதையில் கீழே விழுந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]