டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
5/8/2025 3:33:17 PM
புழல்: சென்னை சோழவரம் அடுத்த பூதூர் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (25). டிராக்டர் டிரைவரான இவர், விவசாயம் செய்கிறார். இன்று காலை கும்மனூர்-பூதூர் செல்லும் சாலையில் செல்லும்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் வயல்வெளி ஓரத்தில் கவிழ்ந்தது. டிராக்டரின் அடியில் சிக்கிய சுரேஷ் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன சுரேஷுக்கு கனிமொழி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.