எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடசென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
5/8/2025 3:31:39 PM
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடசென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. வடசென்னை மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி தெஹ்லான் பாகவி தலைமையில் நடந்தது. இதில், வடசென்னை மாவட்ட புதிய தலைவராக கரீம், துணை தலைவர்கள்- முஹம்மது ரசீத், அப்பாஸ், மாவட்ட பொதுச்செயலாளர்- காஜா மொய்தீன், மாவட்ட செயலாளர்- கோல்ட் ரபிக், முன்னா, மாவட்ட பொருளாளர்- மீரான் மொய்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்- சாமுவேல் பால், கோவிந்தராஜ், புஸ்பராஜ், ரபிக், ஜாகிர், அசாரும், பொதுக்குழு உறுப்பினராக 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் நடைபெற்ற மாவட்ட பொதுகுழுவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு நிவாரண நிதி வீதிதோறும் வசூலிப்பது, விவசாயத்திற்கு விரோதமான மத்திய அரசு அமுல்படுத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை தொடர் பிரச்சாரம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.