காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி : சென்னையை சேர்ந்தவர்கள்
5/8/2025 3:31:11 PM
ஜீயபுரம்: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அந்தநல்லூரை சேர்ந்தவர் ராஜா. இவரது உறவினர் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ராஜன். இவரது மகன்கள் தினேஷ்குமார் (23), கிஷோர்குமார்(21). இருவரும் தனியார் நிறுவனங்களில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்தனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜோதிமணி மகன் கார்த்திக்(23). இவர், அச்சகத்தில் வேலை பார்த்தார். கோயில் திருவிழாவுக்காக ராஜன் தனது 2 மகன்கள் மற்றும் கார்த்திக்குடன் அந்தநல்லூரி ல் உள்ள உறவினர் ராஜா வீட்டுக்கு வந்து தங்கினார். நேற்று மாலை தினேஷ்குமார், கிஷோர்குமார் ஆகியோர் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை காப்பாற்றினர். ஆனால் கார்த்திக் மற்றும் கிஷோர்குமாரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் கார்த்திக், கிஷோர்குமார் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.