கேரள பெண் அமைச்சருக்கு 10ம் தேதி திருமணம்
5/8/2025 3:11:42 PM
திருவனந்தபுரம்: கேரள பெண் அமைச்சர் ஜெயலட்சுமிக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் இளைஞர் நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் பி.கே.ஜெயலட்சுமி (35). கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் முதன்முதலாக மானந்தவாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது சொந்த ஊர் வயநாடு மாவட்டம் மானந்தவாடியிலுள்ள வாளாடு ஆகும். இந்நிலையில் அமைச்சர் ஜெயலட்சுமிக்கும், வயநாடு கம்பளக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயியான அனில்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி வாளாட்டிலுள்ள அமைச்சர் ஜெயலட்சுமியின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.