அசின் கார் பறிமுதல் போலீஸ் அதிரடி
5/8/2025 3:04:38 PM
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று சக தென்னிந்திய ஹீரோயின்களுக்கு வழிகாட்டியவர் அசின். தொடக்கத்தில் மளமளவென்று படங்கள் வந்தபோதும் பின்னர் குறைந்துபோனது. தற்போது ஒன்றிரண்டு இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க காத்திருக்கிறார். இயக்குனர்கள்தான் யாரும் கண்டுகொள்ளவில்லை. தமிழைவிட தெலுங்கு படத்தில் அசினுக்கு நடிக்க அழைப்பு வந்துகொண்டிருக்கிறதாம்.சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு காரில் சென்றார். காரை நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சென்றார். அந்தநேரம் அங்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். விஷயம் அறிந்து ஓடிவந்த அசின் போலீசாரிடம் சாரி கேட்டார். 15 நிமிடம் அவரிடம் போலீசார் வாக்குவாதம் செய்தனர். ஒருவழியாக நடிகை என்ற அந்தஸ்தை வைத்து காரை திரும்ப பெற்றவர் அபராதம் கட்டுவதிலிருந்தும தப்பிவிட்டாராம்.