இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 இடம் பிடித்த மாணவிகள் : ஆவடி, அம்பத்தூர் பள்ளி சாதனை

5/8/2025 3:00:44 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஆவடி அருகே திருமுல்லைவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி அனுசுயா 2-வது இடம் பிடித்துள்ளார். தமிழ் 195, ஆங்கிலம் 192, பொருளாதாரம் 200, வணிகவியல் 199, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200 என மொத்தம் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை கருப்பசாமி, வியாபாரி. தாய் அமுல் குடும்பத் தலைவி.அனுசுயா கூறுகையில், ‘’ சிஏ படிக்க விரும்புகிறேன். தேர்வுக்காக காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். மாலையில் 6 மணி முதல் இரவு 10 மணி வரை படிப்பேன். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம்தான் என்னை அதிக மதிப்பெண்களை எடுக்கவைத்தது’ என்றார்.

ஆவடி நகராட்சி முன்னாள் தலைவரும் பள்ளி தாளாளருமான விக்டரி மோகன், முதல்வர் ரவி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.அம்பத்தூர், சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி மாணவி சுந்தரவள்ளி தமிழ் 196, ஆங்கிலம் 194, பொருளாதாரம் 198, வணிகவியல் 199, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199 என 1186 மதிப்பெண்கள் பெற்று, திருவள்ளூர் மாவட்டத்தில் 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சவுந்திரபாண்டியன், தனியார் கம்பெனி மேலாளர். தாய் விமலா குடும்பத் தலைவி.

சுந்தரவள்ளி கூறுகையில், ‘’ சிஏ படிக்க விரும்புகிறேன். பள்ளியில் நடைபெற்ற வாரத் தேர்வு, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து வந்ததால், எனக்கு இந்த வெற்றியைத் தேடி தந்தது’’ என்றார். சுந்தரவள்ளியை பள்ளி தாளாளர் சேது குமணன், முதல்வர் செல்வகுமார் பாராட்டினர்.ஆவடி நசரத் மெட்ரிக் பள்ளி மாணவி பிரியதர்ஷினி தமிழ் 195, ஆங்கிலம் 193, வேதியியல் 200, இயற்பியல் 199, உயிரியல் 200, கணிதம் 198 என மொத்தம் 1185 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஜெயக்குமார் மளிகை கடை நடத்துகிறார். தாய் சாந்தி குடும்ப தலைவி.‘’டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன். அதிக மதிப்பெண் பெற்றதற்கு, ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்தியதே காரணம். நான் டியூஷனும் படித்தேன்’ என்றார். பள்ளி தாளாளர் சந்திரா டேவிட், முதல்வர் லதா அகியோர் மாணவியை பாராட்டினர்.

மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]