டெல்லியில் ஒரே நாளில் 105 இடங்களில் தீ விபத்து
5/8/2025 2:54:32 PM
புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒரேநாளில் 105 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவா் பலியானார். 4 குதிரைகள் தீயில் கருகின. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பல இடங்களில் தீ பிடித்ததாக தீ அணைப்பு துறையினர் தெரிவித்தனர்.டெல்லி தீ அணைப்பு துறைக்கு நேற்று ஒரே நாளில் 122 அழைப்புகள் வந்தன. இவற்றில் 105 அழைப்புகள் உண்மையானவை. 17 அழைப்புகள் போலியானவை. உண்மையான 105 அழைப்புகள் 2 விபத்துக்கள் மட்டும் சீரியசானவை. மற்ற 103 அழைப்புகள் சிறிய அளவிலான விபத்துக்கள் ஆகும். வட டெல்லியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தென் கிழக்கு டெல்லியில் மதன்பூரில் உள்ள குதிரை பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 குதிரைகள் உடல் கருகி பலியாயின.சுட்டெரிக்கும் வெயில், வறட்சியான வானிலை, சுழற்காற்று ஆகியன தீ விபத்துக்கு முக்கிய காரணம் என தீயணைப்பு துறை தலைவர் ஏ.கே.சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வரும் நாட்களில் தீ விபத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார். டெல்லி தீயணைப்பு துறையில் மொத்தம் 265 தீ அணைப்பு வாகனங்கள் உள்ளன. மேலும் 50 வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சர்மா தெரிவித்தார்.