இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்

5/8/2025 2:53:17 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. சுமார் 4.50 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் அமைதியாக முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 2வது முறையாக போட்டியிடும் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாக தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது.இந்நிலையில், இரு கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்தில் அதிகளவில் வசிக்கும் இந்தியர்களை கவரும் வகையில், பிரதமர் டேவிட் கேமரூன், தொழிலாளர் கட்சியின் தலைவர் எட்மிலிபேன்ட் ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

 வருமான வரி வரம்பு குறைக்கப்படும், நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார் டேவிட் கேமரூன். இந்நிலையில், நேற்று தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சி முந்துவதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் 316 இடங்களை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிடிக்கும் என்றும், தொழிலாளர் கட்சிக்கு 239 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி 58 இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதை அடுத்து, யார் வெற்றிபெற போகிறார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

மேலும் சில
  • சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது



  • அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி



  • எபோலா பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது : உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு



  • நேபாளத்துக்கு நிதி திரட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்



  • மே 8 - உலக செஞ்சிலுவை சங்க தினம்: மக்களுக்கு உதவும் தன்னலமற்ற அமைப்பு



  • இங்கிலாந்தில் நாளை பொதுத்தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்துக்கணிப்புகள் ஆருடம்



  • இத்தாலியில் படகு விபத்து: கடலில் மூழ்கி 40 பேர் பலி



  • ஈராக்கில் பிரதமர் அலுவலகம் மீது குண்டுவீச்சு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]