காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது
5/7/2025 4:58:24 PM
தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இருக்கும் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லாவண்யா என்ற மாணவி தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.மேலும் லாவண்யா ஆங்கிலம் 192, இயற்பியல் 197, வேதியியல் 199, உயிரியல் 200, கணிதம் 200 என மொத்தம் 1187 மதிப்பெண்கள் பெற்று, காஞ்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.தமிழில் மட்டும் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை முத்துசாமி, தென்னக ரயில்வேயில் பணிபுரிகிறார். தாயார் சசிரேகா, அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்.தமிழகத்திலேயே தமிழில் முதலிடம் பெற்ற லாவண்யா மருத்துவம் படித்து மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.இந்நிலையில், காஞ்சி மாவட்ட அளவில் சீயோன் பள்ளி முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. லாவண்யா 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுஜிதா 1186 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தில் லஷ்மிபாரதி 1185 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் 3 இடங்களைப் பிடித்த 3 மாணவர்களுக்கும் சீயோன் பள்ளி தாளாளர் விஜயனும் பள்ளி ஆசிரியர்களும் இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.