பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்
5/7/2025 4:57:55 PM
பெரம்பூர்: பெரம்பூர் பெரியார் நகரில் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீ நந்தினி, பிளஸ் 2 தேர்வில் 1182 மதிப்பெண் பெற்று சென்னை மாவட்டத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்கள். தமிழ் 195, ஆங்கிலம் 190, பொருளியல் 200, வணிகவியல் 200, கணக்குபதிவியல் 199, வணிக கணிதம் 198.தந்தை வள்ளிநாயகம், எழும்பூரில் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாய் காந்திமதி. இதுகுறித்து ஸ்ரீ நந்தினி கூறுகையில், ‘இவ்வளவு மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், சக மாணவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. சி.ஏ படிக்க உள்ளேன்’ என்றார்.