இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; பெடரர் அதிர்ச்சி தோல்வி

5/7/2025 2:56:31 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

மாட்ரிட்: உலக நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் மாட்ரிட் ஓபன் 2வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் கிர்கியோஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்றுப்போட்டிகள் நேற்றிரவு நடந்தது . இதில் உலக தர வரிசையில் 2ம் நிலையில் உள்ளவரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், 20 வயதேயான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை எதிர் கொண்டார்.33 வயது வீரரான ரோஜர் பெடரர் முதல் செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார். ஆனால், அதிவேகத்தில் சர்வீஸ் போடுவதில் வல்லவரான கிர்கியோஸ் அடுத்த 2 செட்களையும் டைபிரேக்கரில் வென்றார். கிர்கியோஸ் 7-6 (7-2), 6-7(7-5), 6-7(14-12) என மூன்று செட்களில் பெடரரை வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். கிர்கியோஸ் அடுத்த செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர் கொள்ள உள்ளார்.

‘கிர்கியோஸ் வீசிய முதல் சர்வீஸ்களை என்னால் சரிவர திருப்ப முடியவில்லை. சர்வீஸ்களை திருப்பி அனுப்புவதில் மிகவும் மோசமாக செயல்பட்டேன். இதனால் ஆட்டத்தில் தோல்வியடைய நேரிட்டது’’ என்று பெடரர் கூறினார். மாட்ரிட் ஓபன் பட்டத்தை ஐந்தாம் முறையாக வெல்லும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ள மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் 6-4, 6-3 என நேர் செட்களில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தினார். நடால் அடுத்த சுற்றில் இத்தாலியின் சிமோன் போலேலியை எதிர் கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்காவை எதிர் கொண்டார். இந்தப்போட்டியில் முதல் செட்டை டை பிரேக்கரில் செரீனா வில்லியம்ஸ் வென்றாலும், இரண்டாவது செட்டை அதிரடியாக கைப்பற்றி செரீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அசரெங்கா. மூன்றாவது செட் இழுபறியாக இருந்தது. இதில் அசரெங்காவுக்கு 4 முறை மேட்ச் பாயிண்டுகள் கிடைத்தும், செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக பதிலடி கொடுத்து செட்டை, டை பிரேக்கரில் கைப்பற்றினார்.  செரீனா இந்த ஆட்டத்தில் 7-6(7-5), 3-6, 7-6(7-1) என மூன்று செட்களில் போராடி அசரெங்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் சில
  • அசார் அலி அசத்தல் இரட்டை சதம் : 450 ரன் பின்தங்கியது வங்கதேசம்



  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் முர்ரே, நடால்



  • கொல்கத்தாவுக்கு 6வது வெற்றி 13 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பியூஷ் சாவ்லா அபாரம்



  • கெயில் சிக்சர் மழையில் நொறுங்கிய பஞ்சாப் 138 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி



  • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி; வாசிம் அக்ரம் கருத்து



  • டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சங்ககரா



  • பாக். சுற்றுப்பயணத்தில் கராச்சியில் விளையாட ஜிம்பாப்வே மறுப்பு



  • பஞ்சாப்பை பந்தாடுமா பெங்களூர்? மழையும் மிரட்டல்



  • ரோகித், ராயுடு அதிரடியில் மும்பை வெற்றி: புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேற்றம்



  • டெல்லியுடன் இன்று மோதல் : சொந்த மண்ணில் பதிலடி தருமா மும்பை?



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]