சட்டப் படிப்பு: 8ம் தேதி முதல் விண்ணப்பம்
5/4/2025 2:52:48 PM
சென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான சட்ட மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி அளித்த பேட்டி: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 5 ஆண்டு பிஏபிஎல் படிப்புகள் பிஏஎல்எல்பி என்றும், 3 ஆண்டு பிஎல் படிப்புகள் எல்எல்பி என்றும் எம்எல் படிப்புகள் எல்எல்பிஎம் என்றும் வழங்கப்படும். மேலும், சட்டப்பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் இந்த ஆண்டு பிசிஏ எல்எல்பி மற்றும் பிபிஏ எல்எல்பி என்ற புதிய 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புகள் தொடங்கப்படுகிறது. அதேபோல முதுகலையில் எல்எல்எம் என்ற புதிய பாடப்பிரிவும், தொலைதூர கல்வியின் கீழ் எம்சிஎல் என்ற படப்பிரிவும் புதிதாக தொடங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். சட்டபல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளின் சேர்வதற்கு வரும் 8ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும். அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 12ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 2 ஆண்டு பாடப்பிரிவுகளில் சேருவதற்கு வரும் 25ம் தேதி விண்ணப்ப விநியோகம் நடைபெறும். அதேபோல, சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.