இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆவின் நிர்வாகத்தில் நவீன கொள்ளை : பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

5/4/2025 2:52:26 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேள்வி கேட்பாரற்ற முறையில், ஜனநாயக நிர்வாக நெறிமுறைகளையே  கேவலப்படுத்தும் வகையில், எதை எடுத்தாலும் அதைத் தங்கள் சொந்த வருவாய்க்கும், கப்பம் செலுத்துவதற்கும் வழி என்ன என்பதிலேயே அக்கறை கொண்டு,  அதையே சதா சர்வ காலமும் எண்ணி எதிர்பார்த்து, நடந்து வரும் அதிமுக ஆட்சியில், அவர்களுக்குக் கிடைத்த மற்றொரு ‘காமதேனு’வாக பால் கொள்முதல்,  பால் விற்பனை இருந்து வருகிறது. அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஒருவரின் கொள்ளை, அளவுக்கு மீறிப் போனதால், அதை மறைக்க வேறு வழியின்றி  அதிமுகவின் தலைமை அந்த அமைச்சரை ‘டிஸ்மிஸ்’ செய்து வீட்டுக்கு அனுப்பியது. அவரும் அத்தோடு தலை தப்பியதே அம்மாவின் புண்ணியம் என்று  பின்னங்கால் பிடரியில் பட ஓடிச் சென்று விட்டார். அதன் பின்னர் அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்த கொள்ளை

வெளியே தெரிந்து, அனைவருடைய கண்டனத்திற்கும் ஆளானதால் அவரைக் கைது செய்து சிறையிலே அடைத்தார்கள். இருந்தாலும் அவர் எப்படியெல்லாம்  பாலில் தண்ணீரைக் கலந்து பஞ்சமா பாதகம் செய்து கொள்ளை அடித்தார் என்ற விவரம் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தக் கொள்ளைகள் குறித்து  தொடர்ந்து எதிர்க் கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுத்தே வந்தன.இந்தப் பால் கொள்முதலில் தற்போது புதிதாக வேறு ஒரு நவீனக் கொள்ளை நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இது தவிர அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற  மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காகப் பால் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஆவின் நிர்வாகம், பால் கொள்முதலில்  ஏற்கனவே செய்து கொண்டிருந்த அளவை விடத் தற்போது சுமார் 15 சதவிகிதம் குறைத்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 25.12 லிட்டர் பாலை மட்டுமே ஆவின்  நிர்வாகம் கொள்முதல் செய்கிறதாம்.

இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுவதுமாக விற்க முடியாமலும், பாதுகாத்திட வழி இல்லாமலும் நட்டத்தை  அடைகிறார்கள். ஆவின் நிர்வாகத்தில் இதுபற்றி ரகசியமாக விசாரித்த போது, தற்போதைய கோடை காலத்தில் பாலைச் சேமித்து வைக்க செலவு அதிகமாகும்  என்பதால், அதனால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, பால்கொள்முதலைக் குறைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு  பிறப்பித்திருப்பதாகவும், அதன்படி பால் கொள்முதல் செய்வதைக் குறைத்திருப்பதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க  பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பால் உற்பத்தியாளர்கள் சுமார் 4 லட்சம் பேர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை விற்பனை செய்கின்ற நிலையில்,  தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்தும், அதனை முழுமையாக விற்பனை செய்ய வேறுவழியின்றி பால் உற்பத்தியாளர்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார்  பால் விற்பனையாளர்களைத் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25  ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது.

அதன் மூலம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து  கொண்டிருக்கின்றன.பாலின் தரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே குறை கூறி ஆவின் நிர்வாகம் உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்  முதல் செய்ய மறுப்பதைக் கண்டித்து அவர்கள் ஆங்காங்கு போராட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆவின் நிர்வாகம் பாலை வாங்க மறுப்பதால், உற்பத்தியாளர்கள்  அதனைக் குறைந்த விலைக்கு சில தனியார்களிடம் விற்றுத் தீர வேண்டியகொடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கும்  தனியார்களே, மீண்டும் ஆவின் நிர்வாகத்திற்கே இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கும் மறைமுக ஒப்பந்தத்தின்படி கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளை  லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆவின் நிர்வாகத்தின் இத்தகைய அட்டூழியச் செயல்களைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன  அறிக்கைகள் வந்துள்ளன.

எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அரசு, மற்றப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதைப் போல பால்  உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையையும்  அலட்சியமாக கருதாமல் உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் அவலத்தை  அகற்றுவதற்கு உதவிக் கரம் நீட்டத் தவறுமேயானால், அதனைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைத்திடவும், அவர்கள் உற்பத்தி செய்யும்  பால் கொள்ளை போகும் கொடுமையைத் தடுத்திடவும் திமுக தமிழக அளவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த  ஆட்சியினருக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • விக்கிரமராஜா தலைமையில் வணிகர் விரோத சட்டங்களின் எதிர்ப்பு மாநாடு : சென்னையில் இன்று காலை தொடங்கியது



  • இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ. 97 கோடியை திருப்பி தரவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை



  • கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு



  • கறவை மாடுகளோடு மறியல் போராட்டம் : பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு



  • பதவியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? அன்புமணிக்கு திமுக முன்னாள் எம்.பி தாமரைச்செல்வன் கேள்வி



  • சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு : சம்பவம் கான்ட்ராக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி கும்பல்: பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதால் பரபரப்பு



  • ஆள் மாறாட்டம் தடுக்க நடவடிக்கை : பாஸ்போர்ட்டில் புதிய நடைமுறை அமுல் : ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்படும்



  • பூண்டி மாதா ஆலய பெருவிழா : நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: 14ம் தேதி தேர்பவனி



  • த.வெள்ளையன் தலைமையில் தஞ்சையில் வணிகர் தின மாநாடு : நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்



  • கார் மீது லாரி மோதி 2 தொழிலதிபர் பலி



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]