பாலத்தில் இருந்து பைக் விழுந்தது கணவன், மனைவி மகன் பரிதாப பலி
5/4/2025 2:42:14 PM
வேலூர்: 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் கணவன், மனைவி, மகன் ஆகியோர் பலியானார்கள்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம்(32). எலக்ட்ரீஷியன். இவர் தனது மனைவி வெண்ணிலா(31), மகன் சாய்குமா ர் (4), மகள் சாஷினி ஆகியோருடன் சென்னையில் தங்கியிருந்தார். இங்கிருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் சொந்த ஊருக்கு பைக்கில் சென்றனர்.வேலூர் சேண்பாக்கம் அருகே உள்ள சென்னை- பெங்களூர் பைபாஸ் சாலையில் சுமார் 40 அடி உயர ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது இவர்கள் வந்த பைக் திடீரென பாலத்தின் தடுப்புச் சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே தூக்கி வீசப்பட்டனர். இதில் கணவன், மனைவி மற்றும் 4 வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 1 வயது குழந்தை சாஷினி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.இதுகுறித்து தகவல் கிடைத்து வந்த போலீசார் 3 பேர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.