ஆன்மிகத்தில் மூழ்கிய மற்றொரு கவர்ச்சி நடிகை
5/4/2025 2:22:28 PM
ரஜினி, அஜீத் தவிர பாலிவுட் நடிகர்கள் பலரும் தாங்கள் நடித்த படம்வெற்றி அடைய வேண்டும் என்று கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். ஹீரோயின்களும் இதை பின்பற்றுகின்றனர். பாலிவுட் கவர்ச்சி கன்னியான சன்னி லியோனுக்கும் தற்போது பக்தி வந்துவிட்டதாம். சமீபகாலமாக அவருக்கு எதிராக பாலிவுட்டில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. டாப் ஹீரோயின்களிடம் அவரது பெயரை சொன்னால் முகம் சுழிப்பதுடன் தன் படத்தில் அவரை குத்தாட்டத்துக்குகூட ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றனர். முன்னணி ஹீரோக்கள் அவருடன் நடிக்க கால்ஷீட் தரவே மறுத்துவிடுகிறார்கள். புது நடிகர்கள், வளர்ந்து வரும் ஹீரோக்கள்தான் அவருடன் நடிக்க ஒப்புக்கொள்கின்றனர்.
எதிர்ப்பு வலுத்துவந்தபோதிலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் எதிராக கருத்து சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்ளாமல் தானுண்டு தன்வேலை உண்டு என்று நடித்து வருகிறார். இந்நிலையில் தான் நடித்திருக்கும் ‘குச் குச் லோச்சா ஹை’கவர்ச்சி படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் சன்னி. பிங்க், யெல்லோ நிறம் கலந்த சல்வார் கமீஸ் அணிந்து சென்றவர் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டார். கோயிலை விட்டு வெளியே வரும்போது யாராவது அவரிடம் சில்மிஷம் செய்துவிடக்கூடாது என்பதற்காக கட்டுமஸ்தான 6 செக்யூரிட்டிகள் அவருக்கு பாதுகாப்பு தந்தார்கள். கோயிலுக்கு சென்று வந்ததிலிருந்து ஆன்மிகம் பற்றி நிறைய பேசுகிறாராம் சன்னி. போக்கிரி, அந்நியன், மம்பட்டியான் என பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடிய முமைத்கான் சமீபத்தில் ஆன்மிகத்தில் மூழ்கி தத்துவங்கள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சன்னியும் ஆன்மிகத்துக்கு மாறி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.