இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

நாகா தீவிரவாதிகள் அட்டூழியம் : துணை ராணுவத்தினர் 8 பேர் சுட்டு கொலை: அசாமில் பரபரப்பு

5/4/2025 2:10:47 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

கவுகாத்தி: அசாமில் நாகா தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 8 துணை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அசாமில் உள்ள சங்லான்சு என்ற இடத்தில் நேற்று பிற்பகலில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி நாகா தீவிரவாதிகள் செல்வாக்கு மிக்க பகுதியாகும். அவர்களை  கட்டுப்படுத்துவதற்காக அசாம் ரைபிள் படையினர் உள்ளிட்ட துணை ராணுவ படையினர்  இங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இந்த சூழலில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர்கள் மீது நாகா தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த வீரர்கள் திருப்பி பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். பின்னர் நாகா தீவிரவாதிகள் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 6 வீரர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன ஆனது என  தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் மத்திய அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அப்பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 2ம் தேதி நடைபெற்ற இதே போன்ற தாக்குதல் சம்பவத்தில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அசாமில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

மேலும் சில
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு



  • பாகிஸ்தானில் அரசு பள்ளி மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கு: மாணவர்கள் தப்பினர் காவலாளி பலி



  • நியு கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி



  • சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]