ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
5/2/2025 12:36:19 PM
அயன், பையா படங்களில் சூர்யா, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தவர் தமன்னா. அதேபோல் சூர்யா, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரணிதா. இது பற்றி அவர் கூறியதாவது: சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருக்கிறேன். தற்போது ‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். செட்டில் கார்த்தி கலகலப்பாக இருப்பார். சூர்யா எப்போதும் காட்சி பற்றியே சிந்தித்தபடி சீரியஸாக இருப்பார். நடிப்பு என்று வந்துவிட்டால் நன்கு ஒத்துழைப்பு கொடுப்பார். மாஸ் படத்தில் நயன்தாராவும் நடிப்பதால் எனக்கு முக்கியத்துவம் இருக்காதா என்கிறார்கள். நயன்தாராவுக்கும், எனக்கும் சமமான கதாபாத்திரம். அது பற்றி இப்போது சொல்ல முடியாது. தெலுங்கில் நான் நடித்திருந்த ‘அத்தரின்ட்டிக்கி தாரெடி’ கன்னடத்தில் ரீமேக் ஆனது. ஆனால் தெலுங்கில் நான் நடித்த கதாபாத்திரத்தை கன்னடத்தில் வேறு நடிகை ஏற்று நடிக்கிறார். இதில் வருத்தமா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. வேறு நடிகை நடிப்பது சந்தோஷமே. கன்னடத்திலும் என்னையே ரிப்பீட் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர் எண்ணி இருக்கலாம். அதுபற்றி விமர்சிக்க விரும்பவில்லை.