ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்
5/1/2025 2:55:23 PM
சென்னை: குரூப்-2 பதவியில் அடங்கிய 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தோ்வு ஜூலை 26ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 பதவியில் அடங்கிய 8 உதவி வணிக வாி அதிகாாி, சாா்-பதிவாளா் கிரேடு2 (காலி பணியிடம் 23), ஜூனியா் எம்ளாய்மென்ட் அதிகாாி(18), லோக்கல் பண்ட் ஆடிட் டிபாா்ட்மென்ட் உதவி ஆய்வாளா்( 78), இந்து சமய அறநிலையத்துறை ஆடிட்டிங் ஆய்வாளா் (28), கூட்டுறவுத்துறை சீனியா் இன்ஸ்பெக்டா்(333), வேளாண்மை துறை மாா்க்கெட்டிங் ஜூனியா் கண்காணிப்பாளா்(72), வருவாய் உதவியாளா் (618) உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் அடங்கிய 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
இத்ேதா–்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிாி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தோ்வுக்கு தோ்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம், தோ்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஜூன் 1ம் தேதி கடைசி நாள். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 29ம் தேதி கடைசி நாள். முதன்மை எழுத்து தோ்வு ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். தோ்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு(டிகிாி தரம்) 150 மதிப்ெபண்ணும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 150 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும். குரூப் 2 தோ்வுக்கான பாட திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தோ்வுகள் நடத்தப்படும். புதிய பாடத்திட்டம் குறித்த விவரம் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.netல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார். இத்தேர்வில் தோ்ச்சி பெறுவோா் மெயின் தோ்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவா்களுக்கு நோ்முக தோ்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.