இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி

5/1/2025 2:50:05 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: பிரதமர் பயணத்தை ராகுல் விமர்சனம் செய்வதா என்று அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி கடந்த மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பேசுகையில், கடந்த ஆட்சியில் இந்தியாவை ஊழல் நாடாக ஆக்கிவிட்டனர். நாங்கள் அதை சுத்தம் செய்து வருகிறோம் என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சூழலில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கொண்டுள்ளதாக அதை கண்டித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கடந்த சில நாட்களாக பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அதை நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.

இந்த சூழலில் நேற்று ராகுல் நிருபர்களிடம் பேசுகையில், நாட்டில் விவசாயிகள் நிலைமை படு மோசமாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளார். அவரது பயணத்தின் போது இந்தியாவில் விவசாயிகளையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜ தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை ராகுல் விமர்சிப்பதா என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், தேசத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு வெளிநாடு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதா என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]