இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்

4/30/2015 2:09:49 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: தெகல்கா மற்றும் டிஎன்ஏ பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவர வலியுறுத்தி மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.ராஜ்யசபா நடவடிக்கைகளை ஒளிபரப்ப தனியாக ஒரு சேனல் உள்ளது. நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த சேனலுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1700 கோடி செலவிடப்பட்டதாக தெகல்கா பத்திரிகை கட்டுரை வெளியிட்டது. டிஎன்ஏ பத்திரிகை இதனை மறு வெளியீடு செய்தது. மேலும் ராஜ்யசபா டிவியின் செயல்பாடுகள் குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு கட்சி பாகுபாடு இன்றி பல எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். பொய் தகவல்களை வெளியிட்ட பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வர வலியுறுத்தி 60 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.

இது குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ராஜ்யசபா டிவிக்கு கடந்த ஆண்டுகளில் ரூ.146 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மேலும் அதன் செயல்பாடுகள் குறித்து தலைமை கணக்கு அதிகாரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த பிரச்னையை உரிமை மீறல் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடியின் நரேஷ் அகர்வால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகியோர் ஆசாத்துக்கு ஆதரவாக பேசினார். பிரச்னையை உரிமைமீறல் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யாநாயுடு இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவையின் முன்பு அனைத்து தகவல்களும் இல்லை. அவையின் உரிமை மீறப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். ராஜ்யசபா செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க பத்திரிகைகளுக்கு உரிமை உள்ளது. இதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. அந்த சுதந்திரம் மக்களுக்கு உள்ளது. குறிப்பாக பத்திரிகைகளுக்கு உள்ளது.  எனவே இந்த விவகாரத்தில் அனைத்து உண்மைகளையும் அறிந்த பின்னர் முடிவு எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்றார்.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]