இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி

4/30/2015 2:09:23 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் நிலம் எடுப்பு மசோதா, ஜிஎஸ்டி மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மே 8ம் தேதி முடிவுக்கு வருகிறது. விடுமுறைகளை கழித்து விட்டால் இன்னும் 5 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, சிறார் நீதி சட்ட திருத்த மசோதா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை மசோதா, கருப்பு பண மசோதா ஆகிய முக்கிய மசோதாக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நிலம் எடுப்பு மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி பேரணியில் பொது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில சட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலர் வெளியில் தைரியமாக கருத்து தெரிவித்திருந்தாலும், உள்ளுக்குள் பாஜவுக்கு சிறிய தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் நில சட்டம் நாடாளுமன்றத்தில் எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே போல் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் இந்த மசோதா குறித்த விவாதமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை விவாதத்துக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு சில எதிர்கட்சிகளை அரசு பக்கம் திருப்பிவிடலாம் என பாஜ தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 இது எந்த அளவு வெற்றி பெறும் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இந்த மசோதாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் சட்ட மசோதாவையும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த மசோதா நேற்று மாநிலங்கள் அவையில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து மசோதாவை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.  கருப்பு பண மசோதா, சிறார் நீதி சட்டதிருத்த மசோதா போன்ற சட்டங்கள் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]