இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தொடர்கிறது அதிகாரிகள் டார்ச்சர் அவலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சல் அரசு ஊழியர் மாரடைப்பால் பலி

4/29/2015 3:55:49 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சல் காரணமாக நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இளநிலை ஊழியர் மாரடைப்பால் இறந்தார்.சென்னையை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் (54). இவர் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் இளநிலை  உதவியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், பல்லாவரத்தில் உள்ள ராஜாஜிநகர் ரேஷன் கடையில் வேலை பார்த்த விற்பனையாளர் ஒருவர் ரூ.27 லட்சம்  முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி இளநிலை உதவியாளர்  சிக்கந்தர் உள்ளிட்ட 4 பேரை கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். செய்யாத தவறுக்கு தன்னை பணி நீக்கம் செய்துவிட்டார்களே என்று  சிக்கந்தர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், இன்று காலை சிக்கந்தர் மாரடைப்பால் உயிர் இழந்தார்.இதுகுறித்து தமிழ்நாடு நியாய விலை கடை ஊழியர் சங்க பிரதிநிதிகள் கூறும்போது,  “தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக உயர் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு துறை ஊழியர்கள் மனஉளைச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் ரேஷன் கடையில் வேலை செய்த இளங்கோ என்ற விற்பனையாளர் கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை  செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன், அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக கூறி நங்கநல்லூர் ரேஷன் கடை ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க  முயன்றார். மேலும், சேலம், திண்டுக்கல் பகுதியில் ஏராளமான ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

 அதிகாரிகளின் ஒருவித கெடுபிடி காரணமாக அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகூட, பல்லாவரம் பகுதியில் உள்ள ரேஷன்  கடையில் பணியாற்றிய சர்வரட்சகன் என்ற விற்பனையாளர் செய்த தவறுக்கு, சம்பந்தமே இல்லாத 4 பேரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். இவர்,  காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்தார். இவருக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று கூறி சிக்கந்தரை  உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். இதனால்தான் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்” என்றனர்.

மேலும் சில
  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு



  • மே தினம்: தலைவர்கள் வாழ்த்து



  • தண்டி யாத்திரை 55ம் ஆண்டு நினைவு தினம் உப்பு சத்தியாகிரக யாத்திரை குழு வேதாரண்யத்தில் உப்பு அள்ளியது



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]