இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சட்டம் இருந்தாலும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட உத்தரவிடவில்லை: இலங்கை அமைச்சர் சாமிநாதன் தகவல்

4/29/2015 3:42:15 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

மீனம்பாக்கம்: இலங்கையின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல்துறை அமைச்சர் சாமிநாதன், இன்று கொழும்பில் இருந்து சென்னை வந்தார்.  விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இலங்கையில் அதிபரிடம் ஒட்டு மொத்தமாக குவிந்துள்ள அதிகாரத்தை குறைத்து, அவரது அதிகார  வரம்புக்குள் வராத விஷயங்களில் பாராளுமன்றம்  முடிவு எடுப்பதற்குரிய 19வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதிபரை எந்த விதத்திலும்  சிறுமைப்படுத்துவது ஆகாது.இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கியுள்ளனர். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 20  ஆண்டு கால அனுபவம். அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அழைத்துக் கொள்ள இலங்கை அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக  அவர்கள் அங்கு வந்து வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து முடிக்க வேண்டும். நாங்கள் பொறுப்பேற்று 2, 3 மாதங்கள்தான் ஆகிறது.  படிப்படியாக வசதிகளை செய்து முடித்த பின்பு அகதிகள் அனைவரையும் எங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போதே  இலங்கை திரும்பும் அகதிகளை வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம்.

ராணுவத்திடம் உள்ள நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெறுகிறோம். குறிப்பாக யாழ்ப்பாணம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும்,  திரிகோணமலையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் திரும்ப பெற்றிருக்கிறோம். இவைகளை உரியவர்களுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். அவைகளும் வந்து விட்டால்  தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து இடங்களும் மீண்டும் அவர்களுக்கு சொந்தமாகி விடும்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணங்களில்  போர் நடந்தபோது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் கண்ணி வெடிகளை அகற்றி  விட்டோம். மீதமுள்ளவை விரைவில் அகற்றி முடிக்கப்படும். அதற்கு பிறகு தமிழர்கள் எந்தவித அச்சமுமின்றி வசிக்கலாம்.

இலங்கையில் பிரதமர் தேர்தல் அடுத்த 2 மாதங்களில் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு 13வது சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு  அமல்படுத்தப்படும். அதற்கு பிறகு ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் தமிழர்களுக்கு சம உரிமை, அந்தஸ்து கிடைக்கும். இந்திய மீனவர் பிரச்னையை  தீர்ப்பதற்கு இந்திய அரசுதான் முன் வர வேண்டும். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். இதில் இந்திய அரசுதான் முழு கவனம்  செலுத்தி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தற்போது சிங்களர்கள், தமிழர்கள் என்ற பேதம் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக  வாழ்ந்து வருகிறோம்.

கடலில் எல்லை தாண்டி வருபவர்களை சுடலாம் என்று சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு சட்டம் உள்ளது. அதே நேரத்தில் அவர்கள்  எல்லை தாண்டி எங்கள் பகுதிக்குள் வந்தால்கூட பரவாயில்லை. எல்லை தாண்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை சுடுவதில் தவறு இல்லை  என்றுதான் அந்த சர்வதேச சட்டம் கூறுகிறது. அதற்காக எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் சுடுவோம் என்ற உத்தரவை நாங்கள் பிறப்பிக்கவில்லை. அப்படி  ஒரு சட்டம் உள்ளது என்று தான் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் சில
  • ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்



  • தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் : அமெரிக்கா பயணத்திற்கு தமிழக மாணவி தேர்வு



  • சென்னையில் மே தின கொண்டாட்டம் : அனைத்து கட்சிகள் பேரணி, சிந்தாதிரிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]