ஜோத்புர் கோர்ட்டில் சல்மான்கான் ஆஜர்
4/29/2015 3:41:25 PM
ஜோத்புர்: சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று ஜோத்புர் கோர்ட்டில் ஆஜரானார்.ராஜஸ்தானில் ஜோத்புர் பகுதியில் ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ இந்தி படத்தின் படப்பிடிப்பு கடந்த 1998ம் ஆண்டு நடந்தது. பட ஹீரோ சல்மான்கான் உள்ளிட்ட சிலர் அன்று இரவு காட்டுப்பகுதிக்கு சென்று மான்களை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவானது. கடந்த 17 வருடமாக இவ்வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 22ம் தேதி சல்மான் கான் வழக்கறிஞர் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். பின்னர் வழக்கு மீதான விசாரணையை வரும் மே 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.