இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு

4/29/2015 3:38:50 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 100 ஸ்மார்ட்டி சிட்டிகள் அமைப்பதற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தானியங்களை கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.புதுடெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் இன்று கூடியது இதில் வெங்கய்யா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது, ஸ்மார்ட் சிட்டி திட்டம், வடமாநிலங்களில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டுள்ள  விவசாயிகளிடம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அலசப்பட்டது.  இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 100 ஸ்மார்ட்  சிட்டிகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதே போல் வட மாநிலங்களில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  உரிய நிவாரணங்கள் தரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மழை காரணமாக ஈரம் பாதித்த கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்களை அதன் குறிப்பிட்ட  ஈரபதத்திற்கும் சற்று கூடுதலாக இருந்தாலும் கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பருவம் தவறிய மழை காரணமாக ஈரப்பதம்  உள்ள கோதுமை உள்ளிட்ட தானியங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தவித்து வந்தனர்.  இந்த சூழலில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கோதுமை உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்ய மறுத்தனர். இதனால் அப்பகுதிகளில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசிவருகிறார். இந்த  சூழலில் மத்திய அமைச்சரவை தானியங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



  • தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்



  • முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி



  • தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு



  • டெல்லியில் பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி



  • மேகதாது அணை விவகாரம் : பிரதமரை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]