சூளகிரி அருகே குவாரியில் வெடிபொருட்கள் பறிமுதல்
4/29/2015 2:47:33 PM
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் செயல்பட்டுவரும் குவாரிகளில் உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்.ஐ. திருநாவுக்கரசு தலைமையில் ஏட்டுக்கள் ராமமூர்த்தி, சரவணன் ஆகியோர் சூளகிரி அருகேயுள்ள இம்மிடிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு 267 ஜெலட்டின் குச்சிகள், 200 மீட்டர் ஒயர், கெமிக்கல் கலந்த பவுடர் 150 கிலோ ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணியாற்றி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். தலைமறைவான குவாரி மேலாளர் அமர்சிங், கண்காணிப்பாளர் அப்துல்(45) ஆகியோரை தேடி வருகின்றனர்.