இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயர்களை கேலி செய்த ரசிகர்கள்

4/29/2015 2:38:19 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

ஹெட்டிங்லே: கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாராவுக்கு அவுட் கொடுத்த விதத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அம்பயர்களை நோக்கி கூக்குரல் எழுப்பி கிண்டல் செய்தனர்.இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான செத்தேஸ்வர் புஜாரா இங்கிலாந்தைச் சேர்ந்த கவுண்டி கிரிக்கெட் அணியான யார்க்‌ஷயருக்காக விளையாடி வருகிறார். யார்க்‌ஷயர்-வார்விஷயர் அணிகள் மோதிய போட்டி ஹெட்டில்லேவில் நேற்று நடந்தது. இதில், புஜாரா  அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.செத்தேஸ்வர் புஜாரா துவக்கம்  முதலே நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.  23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாராவுக்கு வார்விக்‌ஷயர் வேகப்பந்து வீச்சாளர் போய்டு ரான்கின் பந்து வீசினார்.  பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்ற பந்தை பீட்டர் மெக்கே பிடித்தார்.

இந்த கேட்ச்சில் சர்சை ஏற்பட்டது. ரீப்ளேவில் பார்க்கும் போது பந்து தரையில் பட்டு எழும்புபோதுதான் பீட்டர் மெக்கே பிடித்தது தெரிய வந்தது. ஆனால், அம்பயர் ஸ்டீவ் காராட், ஸ்கொயர் லெக் அம்பயர் ஜெரிமி லாயிட்சுடன் ஆலோசனை நடத்திவிட்டு, புஜாரா அவுட் என நேரடியாக அறிவித்துவிட்டார். மூன்றாவது அம்பயரிடம் அவர் ஆலோசனை நடத்தவில்லை.  இதனால், புஜாரா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.சர்ச்சைக்குரிய முறையில் புஜாராவுக்கு அவுட் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த யார்க்‌ஷயர் ரசிகர்கள்,  வார்விக்ஷயர் வீரர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பினர். ‘இது ஆரோக்கியமான ஆட்டம் கிடையாது’ என்று அவர்களைப் பார்த்து கூறினர். ஆட்டம் முடிந்து அம்பயர்கள் திரும்பும்போதும் அவர்களை நோக்கி கூக்குரல் எழுப்பி அவமதித்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அம்பயர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

மேலும் சில
  • இந்தியாவுடன் விளையாட வெ.இ. விருப்பம்



  • பிரேகு ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா முன்னேற்றம்



  • சேப்பாக்கத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி



  • ஜிம்பாப்வே அணி பாக். சுற்றுப்பயணம்



  • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் கிடையாது



  • 114 வாரங்களாக உலகின் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் சாதனை



  • போல்ட் வேகத்தில் போல்டு ஆனது பஞ்சாப் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 3வது வெற்றி



  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் நிஷிகோரி மீண்டும் சாம்பியன்



  • ஷாம்கிர் செஸ் தொடர்; கார்ல்சன் சாம்பியன்



  • அசத்தும் ஸ்டார்க், ரஹானே சொதப்பும் யுவராஜ், கார்த்திக்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]