வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டம்
4/29/2015 2:25:12 PM
திருவொற்றியூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வண்டலூர் விஜிபி திடலில் 32வது வணிகர் தின மாநாடு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மே 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து மணலி சேக்காடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் மணலி காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ரவி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்க வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 50 வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மாரிமுத்து, திருமால்சாமி, தர், சந்தனாசேகர், ராஜசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.