பட்டாபிராமில் நலத்திட்ட உதவிகள்
4/29/2015 2:24:50 PM
ஆவடி: ஆவடி நகர திமுக 47வது வார்டு சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் நடந்தது. வட்ட செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான பொன்.விஜயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நல்லுசாமி, லிங்கம், ரமேஷ், மனோகரன், பாபு, ராஜேஷ், மோகன், சரத்குமார், சிவா, ராஜு, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் மலைபாலகிருஷ்ணன் பேசினார். 400 ஏழைகளுக்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர், சேலைகளை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, நகரமன்ற துணைத் தலைவர் கலைசேகர், நகர நிர்வாகிகள் ருக்கு, ராஜேந்திரன், சவுந்தர், நளினி கோபி, சன்பிரகாஷ், ஆவடி செல்வா, சேகர், சிங்காரம், நாகூர்கனி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.