இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பருப்பு வகைகளின் விலை உயர்வுக்கு செயற்கை தட்டுப்பாடே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

4/29/2015 2:20:22 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை கடந்த மாதம் வரை கிலோ ரூ.100 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.125 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் உளுத்தம் பருப்பின் விலை கிலோ 90 ரூபாயிலிருந்து  ரூ.115 ஆக உயர்ந்திருக்கிறது. கடலைப் பருப்பின் விலை கிலோ 50 ரூபாயிலிருந்து ரூ. 60 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.2 வரையிலும், வெல்லம் விலை கிலோவுக்கு 5 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. பூண்டு விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு  உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பருப்பு வகைகளின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவும், ஆன்லைன் வணிகம் மூலம்  சிலர் பெருமளவில் வாங்கி பதுக்கி வைத்திருப்பதும் காரணம் என்று கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால் ஏற்படும் தட்டுப்பாட்டை தடுக்க முடியாது. ஆனால், பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்கவும், போக்கவும் தமிழக அரசால் முடியும்.சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் வினியோகத்தை தமிழக அரசு பாதிக்கும் கீழாக குறைத்து விட்டது. கடந்த 6 மாதங்களாகவே இதே நிலை தான் காணப்படுகிறது. பல நியாயவிலைக் கடைகளில் பருப்புகளே வழங்கப்படுவதில்லை.

கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 17,500 டன் துவரம் பருப்பும், 9000 முதல் 9500 டன் உளுத்தம் பருப்பும் தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தேவைக்கு அதிகமாகவே பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படாததற்கு காரணம் என்ன? வாங்கப்பட்ட பருப்பு வகைகள்  என்னவாயின? என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தான்  வெளிச்சம்.வெளிச்சந்தையில் விலை குறையும் வரை, அவற்றை குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ வீதம் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்



  • தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் : அமெரிக்கா பயணத்திற்கு தமிழக மாணவி தேர்வு



  • சென்னையில் மே தின கொண்டாட்டம் : அனைத்து கட்சிகள் பேரணி, சிந்தாதிரிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]