ஆபாச வீடியோவில் அனுஷ்கா? திரையுலகில் சலசலப்பு
4/28/2015 2:29:21 PM
அம்மன் வேடங்களில் நடிப்பதுடன் கவர்ச்சி வேடங்களையும் ஏற்று நடிக்கிறார் அனுஷ்கா. விரைவில் அவர் நடிப்பில் ருத்ரம்மாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில் அவரது பெயரை குறிப்பிட்டு இணைய தளத்தில் ஆபாச வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சேரில் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு பின்னால் பாய்பிரண்ட் ஒருவர் இருக்கிறார். சில நொடிகளில் பின்னால் அமர்ந்திருக்கும் அந்த நபர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். பார்ப்பதற்கு அனுஷ்கா சாயலில் அப்பெண் இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே இந்த வீடியோ இன்டஸ்ரியில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது, ‘அப்படியொரு ஆபாச வீடியோ வெளியானதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது’ என்றனர். குறிப்பிட்ட வீடியோவை தொடர்ச்சியாக இணைய தள பக்கங்களில் சிலர் ஷேர் செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே ஹீரோயின்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். முதலில் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் வெளியானது. இதையடுத்து ஹன்சிகா, ராதிகா ஆப்தே, லட்சுமி மேனன் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலிவுட்டில் கோரிக்கை எழுந்துள்ளது.