குடிநீர் பிரச்னை தீர்க்க பேரூராட்சியில் தீர்மானம்
4/28/2015 2:16:33 PM
திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்த்து, சீராக குடிநீர் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமழிசை பேரூராட்சிக் கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் வே.முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினர். தொடர்ந்து கோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்கி சீராக குடிநீர் வழங்குதல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கே.பாஸ்கரன், எல்.சங்கர், கே.மாலதி, வி.சங்கர், தி.வே.முனுசாமி, கே.முருகன், ஆர்.கருணாநிதி, வி.வேணுகோபால், டி.செண்பகவல்லி, மு.திருநாவுக்கரசு, கே.சுபாஷினி, சி.விஜயலட்சுமி, பி.சந்திரன், ஆர்.ராசாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.