பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்
4/27/2015 4:33:23 PM
கர்நாடக
மாநிலம், மைசூரில் விரைவில் முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும்
அச்சகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள
கார்ப்பரேட் அலுவலகத்திலும் துணைமேலாளர் உள்ளிட்ட 19 இடங்கள் காலியாக
உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.‘
பணியிடங்கள் விவரம்:
1. துணை மேலாளர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்):
1 இடம்.
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
2. இன்ஜினியர்/ ஆபீசர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்):
4 இடங்கள்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
3. இன்ஜினியர்/ ஆபீசர் டிரெய்னீஸ்:
13
இடங்கள். (மெக்கானிக்கல் - 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 2,
எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் - 5, கெமிக்கல்/ பேப்பர் மற்றும் பல்ப்
-4).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
4. நிர்வாக செயலாளர் (அதிகாரிகள் லெவல்):
1 இடம்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
இட ஒதுக்கீடு, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.