எல்லை காவல் படையில் 346 கான்ஸ்டபிள் பணி 10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
4/27/2015 3:47:43 PM
மத்திய
துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லை காவல் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு
10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
கான்ஸ்டபிள் (ஜிடி):
ஆண்கள் - 241, பெண்கள் - 105.
விளையாட்டு பிரிவு வாரியாக காலிஇடங்கள் விவரம்:
ஆண்கள்:
அ. தனி விளையாட்டு:
அதலடிக்ஸ்
- 42, வில் வித்தை - 5, குத்துச் சண்டை - 5, கிராஸ் கன்ட்ரி - 18,
ஜிம்னாஸ்டிக்ஸ் - 11, ஜூடோ - 7, நீச்சல் - 28, துப்பாக்கி சுடுதல் - 26,
பளு தூக்குதல் - 12, நீர் விளையாட்டு - 17, மல்யுத்தம் - 21.
ஆ. குழு விளையாட்டு:
கூடைப்பந்து - 12, கால்பந்து - 8, ஹாக்கி - 8, கைப்பந்து - 3, கபடி - 7, போலோ - 1, வாலிபால் - 10.
பெண்கள்:
அ. தனி விளையாட்டு:
அதலடிக்ஸ்
- 17, வில்வித்தை - 9, குத்துச் சண்டை - 20, ஜூடோ - 10, நீச்சல் - 13,
துப்பாக்கி சுடுதல் - 3, பளு தூக்குதல் - 5, நீர் விளையாட்டு போட்டி - 12,
மற்போர் - 16.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.
வயது:
1.8.2015ன்படி 18லிருந்து 23க்குள். மத்திய அரசு விதிமறைப்படி எஸ்சி/ எஸ்டி/ ஒபிசியினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி.
விளையாட்டு தகுதி:
மேலே
குறிப்பிடப்பட்ட விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் தேசிய அளவிலான
போட்டிகளில் மாநிலம் சார்பாக அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் நாட்டின்
சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான
போட்டிகளில் பல்கலைக்கழக சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது அகில
இந்திய அளவில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் போட்டிகளில் மாநில பள்ளிகள்
சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்:
உயரம்: 170 செ.மீ., மார்பளவு: 80 - 85 செ.மீ., பெண்களுக்கான உயரம்: 157 செ.மீ.,
எஸ்டி பிரிவு: ஆண்களுக்கான உயரம்: 162.5 செ.மீ., மார்பளவு: 76 - 81 செ.மீ.,
எஸ்டி பிரிவு பெண்களுக்கான உயரம்: 150 செ.மீ., எடை: உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடை.
விண்ணப்ப கட்டணம்
ரூ.50.
இதை Commandant 25 Bn BSF என்ற பெயரில் SBI, Najafgarh, ADB, New Delhi,
Bank code - 001419 மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
போஸ்டல்
ஆர்டர் மூலமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த விரும்புகிறவர்கள் Commandant
25 Bn BSF என்ற பெயரில் Post Office Chhawlaல் மாற்றத்தக்க வகையில் எடுக்க
வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்களின்
உடல் அளவு சரி பார்ப்பு, சான்றிதழ்கள் சரி பார்ப்பு, உடல் திறன் தேர்வு,
விளையாட்டு திறன் தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படை யில் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandant,
25 Bn BSF, Chhawala Camp,
Post Office- Najafgarh,
NEWDELHI- 110 071.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.5.2015.