மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை
4/27/2015 3:41:34 PM
மத்திய அரசின் பல்வேறு
துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு யுபி எஸ்சி அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. மத்திய வேளாண் துறையின் கீழ் உள்ள கால்நடை வளர்ப்புப் பண்ணையில் பராமரிப்பு அதிகாரி:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
வயது:
30.4.2025 அன்று 30க்குள்.
தகுதி:
வேளாண்மை பாடத்தில் விலங்கு அறிவியல் துணைபாடத்துடன் பி.எஸ்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
2.
மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள
கான்பூர் தேசிய சர்க்கரை நிறுவனத்தில் இளநிலை அறிவியல் அதிகாரி (உயிரி
வேதியியல்):
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
வயது:
30.4.2025 அன்று 35க்குள்.
தகுதி:
உயிரி வேதியியல் சிறப்பு பாடத்துடன் வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி. மற்றும் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.
3. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் பரிசோதனை மையத்தில் நுண்ணுயிர் இணை ஆராய்ச்சியாளர்:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.
வயது:
30.4.2025 அன்று 30க்குள்.
தகுதி:
நுண்ணுயிரியல்
அல்லது உயிரி வேதியியல் அல்லது நுண்ணிய உயிரியல் பாடத்தில் எம்.எஸ்சி.
மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
4. மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட ஆணையத்தில் கூடுதல் சட்ட அதிகாரி:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.
வயது:
30.4.2025 அன்று 50க்குள்.
தகுதி:
சட்டப் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் மத்திய அல்லது மாநில சட்டத்துறைகளில் 13 ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றிய அனுபவம்.
5.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள
வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் (நிலை -2):
(எலக்ட்ரிக்கல்).
5 இடங்கள் (பொது).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
வயது:
30.4.2025 அன்று 30க்குள்.
தகுதி:
எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ., மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
6.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள
வளர்ச்சி ஆணையர் அலுலவலகத்தில் உதவி இயக்குநர் (நிலை -2).
(எலக்ட்ரானிக்ஸ்).
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
வயது:
30.4.2025 அன்று 30க்குள்.
தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் பி.இ. மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
7.
டெல்லி அரசின் கீ்ழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்
கீழ் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டுப் பிரிவில் மருந்து ஆய்வாளர்கள்:
7 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 1).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.
வயது:
30.4.2025 அன்று 30க்குள்.
தகுதி:
மருந்தியல்
அல்லது மருந்தியல் அறிவியல் அல்லது மருத்துவமனை மருந்தியல் அல்லது
நுண்ணுயிரியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும்
சம்பந்தப்பட்ட துறையில் 18 மாதங்களுக்கு குறையாத முன் அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.25.
இதை ஸ்டேட் வங்கியில் செலான் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ
செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப
கட்டணம் கிடையாது.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.