சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு கூட்டம்
4/25/2015 12:52:38 PM
மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று காலை தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மாணிக்கவாசகம், உதவி பொறியாளர்கள் சாமிநாதன், அறிவழகன், எத்திராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், பணி மேற்பார்வையாளர்கள் ரவி, மதியழகன், பழனி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.இப்பயிற்சி கூட்டத்தில் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு தங்கள் வீடுகளில் அரசு வழங்கும் மானியத் தொகைகளை பெற்று, கழிவறைகளை விரைந்து கட்டுதல், தங்களது இல்லத்தை சுற்றிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறப்பட்டது.