மத்திய போலீஸ் படைகளில் 2902 எஸ்.ஐ.க்கள்
4/24/2015 2:20:00 PM
மத்திய ஆயுத போலீஸ் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), இந்தோ திபெத் போலீஸ் படை (ஐடிபிபி), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) மற்றும் டெல்லி போலீஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 902 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஜூன் 21ம் தேதி ஸ்டாப் செலக்ஷன் தேர்வு நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அ. சப்-இன்ஸ்பெக்டர்
1. சிஆர்பிஎப்: ஆண்கள்: 205
பெண்கள்: 16
2. பிஎஸ்எப்: ஆண்கள்: 577, பெண்கள்: 30
3. ஐடிபிபி: ஆண்கள்: 266
பெண்கள்: 23
4. சிஎஸ்ஐஎப்: ஆண்கள்: 482
பெண்கள்: 54
5. எஸ்எஸ்பி: ஆண்கள்: 35
பெண்கள்: 18
பணி: ஆ. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்
1. சிஐஎஸ்எப்: ஆண்கள்: 991
பெண்கள்: 110
பணி: டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் (எக்சிக்யூக்டிவ்) (ஆண்கள் மட்டும்). 84 இடங்கள்
வயது: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.01.2025 அன்று 20 முதல் 25க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் (பைக் மற்றும் கார்) உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உடல் அளவுகள்: ஆண்கள்: உயரம்: பொது மற்றும் ஒபிசி, எஸ்சியினருக்கு 170 செ.மீ., (எஸ்டியினருக்கு 162.5.செ.மீ), மார்பளவு: சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டியினருக்கு சாதார நிலையில் 77 செ.மீ., விரிவடைந்த நிலையில் 82 செ.மீ.,
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். தபாலிலோ அல்லது http://ssconline.nic.in and http://ssconline1.gov.in என்ற இணையதளங்களிலோ விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 21.06.2015.
ஆன்லைனில் விண்ணப்பத்தின் ஒரு பகுதியை அனுப்ப கடைசி நாள்: 26.04.2015.
விண்ணப்பத்தின் இரண்டாவது பகுதியை அனுப்ப கடைசி நாள்: 28.04.2015.
தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 28.04.2015.