இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தொழில்

வெயிட்டேஜ் பிரச்னைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

9/3/2025 3:46:08 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்,  பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை  முயற்சியும் செய்துள்ளனர். தமிழக அரசு  இதை கண்டும், காணாமல் இருந்து வருகிறது.இந்த பிரச்னைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை  நடப்பதுபோலவும் தமிழகஅரசு நடந்து கொள்கிறது. தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த  பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் இந்த வெயிட்டேஜ்  மதிப்பெண்ணை பெறமுடியாது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த  வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.

வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை  ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி  பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும். இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம்  ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன்  ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி  இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • சுப்பிரமணியசாமி பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்



  • ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண என்எல்சிக்கு தொமுச வலியுறுத்தல்



  • நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்



  • சமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • காசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு



  • சணல் பொருளில் சூப்பர் லாபம்



  • செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பில் சூப்பர் லாபம்



  • ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு



  • கலக்கல் லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு



  • சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]