இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு

11/2/2025 5:12:53 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சில இடங்களில் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், விடுமுறை என தெரிந்ததும் வீடுகளுக்கு திரும்பினர்.
இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூர் கொத்தவாச்சேரியில் 150 மிமீ, சேத்தியாதோப்பு, பாண்டவையார் பகுதிகளில் தலா 90 மிமீ, திருத்துறைப்பூண்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டையில் தலா 70 மிமீ, புவனகிரி, சோழவரம், சிதம்பரம், குலசேகரப்பட்டினம், இரணியல் பகுதிகளில் தலா 60 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 5ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களுக்கு, அமைச்சர்கள், எம்.எல்ஏ.க்கள் மற்றும் கலெக்டர்கள், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்றிரவு முதல் விடியவிடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் தேங்கியதாலும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னை நகரில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், மதுரவாயல், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலைநகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில இடங்களில் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், விடுமுறை என தெரிந்ததும் வீடுகளுக்கு திரும்பினர்.

மேலும் சில
  • காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அருகே மழையால் வேருடன் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடல் நசுங்கி பலி



  • இலங்கை தமிழர்களுக்காக 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



  • கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்



  • சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்



  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு



  • 586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்



  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு



  • கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]