இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு

10/30/2021 5:05:21 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பனாஜி: கோவா சென்ற மம்தாவுக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டியதற்கு மம்தா பானர்ஜி ‘நமஸ்தே’ கூறினார். முன்னதாக டென்னிஸ் வீரர், பாலிவுட் நடிகைகள் சிலர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். கோவா மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக கோவா சென்றுள்ளார். பனாஜியில் அவர் பேசுகையில், ‘பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மேற்குவங்கத்தில் அவர்களை வீழ்த்திய நாங்கள் தற்போது கோவாவில் களத்தில் இறங்கியுள்ளோம். பாஜகவை எதிர்த்து போராடவில்லை என்றால், அவர்கள் நாட்டை முடித்துவிடுவார்கள். நாட்டையே விற்றுவிடுவார்கள். நேற்று நான் கோவா வந்தபோது, அவர்கள் எனக்கு எதிராக கருப்புக் கொடிகளைக் காட்டினர்; ஆனால் நான் அவர்களுக்கு ‘நமஸ்தே’ என்று கூறினேன். நான் ஒரு இந்தியர் என்பதால், நாட்டின் எந்த பகுதிக்கும் சென்றுவர முடியும். மேற்குவங்கம் மட்டும் என் தாய்நாடு அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும் என்னுடைய தாய்நாடு.

மேற்குவங்கம் மிகவும் வலுவான மாநிலம். கோவாவையும் அதேபோல் வலுவான மாநிலமாக பார்க்க விரும்புகிறோம். கோவாவில் புதிய விடியலைப் பார்க்க விரும்புகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்ற இங்கு நான் வரவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவ வந்துள்ளேன். மேற்குவங்கத்தில் இருக்கும் மம்தா, கோவா பிரச்னைகளை எப்படி தீர்ப்பார்? என்று கேட்கின்றனர். ஏன் கூடாது? நான் ஒரு இந்தியன்; எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற முடியும். மதச்சார்பின்மையை நம்புகிறேன்.

நாட்டின் ஒற்றுமையை நம்புகிறேன். பாஜக சாதி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. பாஜக மக்களின் மனதில் விஷத்தை நிரப்புகிறது’ என்றார். முன்னதாக டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு ஆகியோர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

மேலும் சில
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை



  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]