இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

9/27/2021 5:05:20 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு 10 ஆண்டுகள் ஆனாலும் கூட எங்களது போராட்டம் அதுவரை தொடரும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் டெல்லியில் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் இன்று 10 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன்  சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 டெல்லியின் பஞ்சாப், அரியானா எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. காசியாபாத், குர்கான் போன்ற எல்லைகளில் விவசாயிகள் சாலையில் டிராக்டரை நிறுத்தி போராட்டம் நடத்தி வருவதால், வழக்கமான பணிக்காக டெல்லிக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். தலைநகர் டெல்லியில் சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. வாரத்தின் முதல் நாள் என்பதால், டெல்லியின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருந்தும், போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.

இதுகுறித்து, துணை போலீஸ் கமிஷனர் (டெல்லி) தீபக் யாதவ் கூறுகையில், ‘முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார். மேலும், மும்பை - அகமதாபாத் சாலையில், பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மும்பை, தானே, நவி மும்பை நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்தனர். பஞ்சாப் மற்றும் அரியானாவில் டெல்லி - அமிர்தசரஸ் உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தலைநகரில் செங்கோட்டையின் இருபுறமும் உள்ள சாலை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிறமாநிலங்களில் எதிர்கட்சிகள் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைட் கூறுகையில்,  ‘விவசாயிகள் சட்டத்தை கொண்டு வந்தது யார்?, இது யாருடைய அரசு? எங்கள்  இயக்கம் அரசாங்கத்திற்கு எதிரானது. வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை  போராட்டம் தொடரும்; 10 ஆண்டுகள் ஆனால் கூட தொடர்ந்து போராடுவோம். இன்று மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

மேலும் சில
  • கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்



  • கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்



  • கேரளாவை புரட்டிப் போட்ட கன மழை, பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் கதி என்ன? தேடுதல் பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்



  • டெல்லியில் காங். செயற்குழு கூடியது: ராகுல் புதிய தலைவர் ஆவாரா?: சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலை சந்திப்பது குறித்து வியூகம்



  • உட்கட்சி தேர்தல், 5 மாநில பேரவை தேர்தலுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் யார்?: நீண்ட இழுபறிக்கு பின் நாளை காங். செயற்குழு கூட்டம்



  • நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மின்ெவட்டு; 115 அனல் மின்நிலையங்கள் மூடப்படும் அபாயம்?.. அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை



  • விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் முழு அடைப்பு: நாடு முழுவதும் காங். சார்பில் மவுன ேபாராட்டம்



  • அடுத்தடுத்து தீபாவளி, மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை; கொரோனா பரவல் அச்சத்தால் ‘மிஷன் 100 நாட்கள்’- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல்



  • நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு அபாயம்: அச்சத்தில் மாநில முதல்வர்கள்; ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை



  • உத்தரபிரதேச தேர்தலை மையப்படுத்தி பிரியங்காவின் பேரணி பெயர் திடீர் மாற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]