இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது

9/26/2021 4:51:01 PM
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு

இடைப்பாடி: நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் (32). விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் இலக்கியா (26). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பஸ்சில் சென்று வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் தர்மபுரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட பாலமுருகன், சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். பாலமுருகனும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டார். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார். அவரை இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்த பாலமுருகனை மீட்டு இடைப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு



  • தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இயற்கையை வெல்ல வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு



  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.!



  • தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: தொடர்ச்சியாக கனமழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றவாளிகளை கண்காணிக்க சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு



  • விடிய விடிய கனமழை கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில் திடீர் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு



  • இன்ஜி. துணை கலந்தாய்வு நிறைவு : மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன



  • நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 21வது நாளாக அதிகரிப்பு: முறையே 30, 33 காசு உயர்வு



  • தமிழகம் முழுவதும் 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]