இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!

9/23/2021 5:01:06 PM
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு

சேலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் பங்களாவிற்குள் சென்ற அந்த கும்பல் அங்குள்ள அறைகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களை கொள்ளை யடித்து சென்றது. இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை ேபாலீசார் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதாவது ஏப்ரல் 28ம் தேதி இரவு ஆத்தூர் அருகேயுள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான், தனது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மனைவி, மகள் உயிரிழந்தனர்.

தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான். தன்னை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சயானிடம் ஊட்டியில் நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு புதிய தகவல்களை சயான் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால் ஆரம்பக்கட்டத்தில் இருந்து ஊட்டி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது சகோதரர் விபத்தில் இறந்தது எதிர்பாராமல் நடந்தது அல்ல. திட்டமிட்ட கொலையே என்றார். அதே நேரத்தில் கனகராஜின் மனைவி கலைவாணியும், தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை, திட்டமிட்டே கொலை செய்து விட்டனர் என்று கூறினார். ஏற்கனவே கனகராஜ் விபத்து வழக்கு, ஆத்தூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அங்கு வழக்கும் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் கனகராஜின் மனைவி கலைவாணியும், அண்ணன் தனபாலும், டிரைவர் கனகராஜ் சாவில் சந்தேகம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் தனிப்படை போலீசார் சேலம் வந்து கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்ப நிலையில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி கடந்த 2017, ஜூலை 3ம் தேதி தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் தந்தை மற்றும் அக்காளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் கைதான சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், பிஜின், உதயகுமார், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசீஷ்ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. பல முக்கிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் தகவல்களை பெறுவதற்காக 2வது நாளாக இன்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில
  • டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு



  • தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இயற்கையை வெல்ல வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு



  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.!



  • தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: தொடர்ச்சியாக கனமழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றவாளிகளை கண்காணிக்க சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு



  • விடிய விடிய கனமழை கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில் திடீர் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு



  • இன்ஜி. துணை கலந்தாய்வு நிறைவு : மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன



  • நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 21வது நாளாக அதிகரிப்பு: முறையே 30, 33 காசு உயர்வு



  • தமிழகம் முழுவதும் 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]