இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு

9/20/2021 5:21:41 PM
அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை கட்சி தலைமை முடுக்கிவிட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி (58) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மேலிட பார்வையாளருமான ஹரிஷ் ராவத் நேற்று அறிவித்தார். இதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தை சேர்ந்த முதல்வர் என்ற பெருமையை சரண்ஜித் சிங் சன்னி பெறுகிறார்.

 முதல்வர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங் சன்னி அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத் தலைவர் சித்துவுக்கு நெருக்கமானவர் என்றும், அமரீந்தர் சிங்கை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சண்டிகர் ராஜ்பவனில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில், பஞ்சாப்பின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பஞ்சாபில் முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த  முதல் நபராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்ற நிலையில், துணை முதல்வர்களாக அமிர்தசரஸ் மத்திய தொகுதி எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சோனியும், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவும் பதவியேற்றனர். இவர்களுக்கும்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய முதல்வராக ெபாறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கு, பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இன்று மாலை முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை, புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



  • கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை



  • அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்த நிலையில் டெங்கு வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க!: சென்னை உட்பட 20 மருத்துவக் கல்லூரிகளில் பரிசோதனை



  • தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கேரளாவுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை



  • கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்



  • கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்



  • கேரளாவை புரட்டிப் போட்ட கன மழை, பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் கதி என்ன? தேடுதல் பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்



  • டெல்லியில் காங். செயற்குழு கூடியது: ராகுல் புதிய தலைவர் ஆவாரா?: சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலை சந்திப்பது குறித்து வியூகம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]