இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி

9/20/2021 5:13:32 PM
அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

பெங்களூரு: மோடி அலையால்  மட்டுமே கர்நாடகா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இது பாஜகவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது: கர்நாடகாவில் நடக்கும் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். மோடியின் பெயரை சொல்லி வெற்றி பெற்று விடலாம் என்ற மாயநிலையில் நாம் இருக்கக்கூடாது.

கர்நாடகாவை பொறுத்த வரை கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளை சொல்லி வெற்றி பெற்றோம். மோடி அலையால் மட்டுமே நாம் வெற்றி பெற்றுவிடவில்லை. இதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆதரவு அலையையும் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் பாரதிய ஜனதா செய்துள்ள சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள். அதுதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். நாம் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது தரும் தகவல் என்ன என்பதை அறிய வேண்டும்.

எனவே ஏதாவது ஒரு அலையை நம்பி எளிதாக வென்று விடலாம் என்று நினைக்காதீர்கள். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் வலிமை பெற்று இருக்கின்றன. நாம் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அடுத்த 2 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை மலரச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி பாரதிய ஜனதாவை வலிமைப்படுத்தி இருக்கிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையில் மீண்டும் பாஜ ஆட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். முதல்வர் பதவியை விட்டு இறக்கியதால், அவர் மோடியை மறைமுகமாக பேசி தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது பாஜ தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் சில
  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



  • ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு 36 மணிநேர உண்ணாவிரதம் துவங்கினார்: முதல்வர் ஜெகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு



  • கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை



  • அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்த நிலையில் டெங்கு வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க!: சென்னை உட்பட 20 மருத்துவக் கல்லூரிகளில் பரிசோதனை



  • தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கேரளாவுக்கு 2 நாள் மழை எச்சரிக்கை



  • கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்



  • கேரள நிலச்சரிவில் 29 பேர் பலி: மேலும் 4 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரம்



  • கேரளாவை புரட்டிப் போட்ட கன மழை, பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் கதி என்ன? தேடுதல் பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்



  • டெல்லியில் காங். செயற்குழு கூடியது: ராகுல் புதிய தலைவர் ஆவாரா?: சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலை சந்திப்பது குறித்து வியூகம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]