இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது: 440 கல்லூரிகள் பங்கேற்பு

9/15/2021 5:04:59 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

சென்னை: பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியானதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் 440 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. மேலும் சிறப்பு பிரிவினரில் கட்- ஆப் மதிப்பெண்களில் முதல் 72 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர மாணவர்கள் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் வரை விண்ணப்பித்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேரும் விண்ணப்பித்தனர்.

கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒரே கட்-ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு, ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி மாணவர்களுக்கான சம வாயப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 50 உதவி மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த 22,671 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 1,74,930 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டிடல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 461 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், உள் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இன்மை ஆகிய காரணத்தால் சில கல்லூரிகளின் உரிமைத்தை நீட்டிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மறுத்துவிட்டது. அதன்காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அரசுப் பள்ளியில் படித்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு இணைய வழியில் தொடங்கியது. சிறப்பு பிரிவினரில் கட்- ஆப் மதிப்பெண்களில் முதல் 72 இடங்களை பிடித்த  மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 50 உதவி மையங்களுக்கு அழைக்கப்பட்டு இணைய வழியாக நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்கள் இணையவழி மூலம் தங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். சிறப்பு பிரிவனருக்கான கலந்தாய்வு வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]