இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மருத்துவராகும் கனவு பாழானதால் விரக்தி; நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: அரியலூர் அருகே சோகம்

9/14/2021 5:06:41 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

அரியலூர்: அரியலூர் அருகே நீட் தேர்வு கடினமாக இருந்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள்.  இரண்டாவது மகள் கனிமொழி(17). இவருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர் ஆக வேண்டும் என ஆசை. ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளியில் படித்த கனிமொழி, 10ம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த அவர், 12ம் வகுப்பில் 562.28  மதிப்பெண் (93 சதவீதம்) பெற்றார்.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிப்பேன் என்று பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் கனிமொழி தஞ்சையில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு சென்று தேர்வெழுதினார்.  தேர்வு முடிந்து வெளியே வந்த கனிமொழி தன் ெபற்ேறாருடன் பஸ்சில் ஜெயங்கொண்டம் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் தந்தையிடம், தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. இதனால் நிறைய கேள்விகளுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை என சோகமாக கூறியபடி வந்துள்ளார்.

அவரை ஆறுதல்படுத்தியபடி தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று முழுவதும் கனிமொழி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையே கனிமொழியின் தாய் ஜெயலட்சுமி நேற்று மாலை 6 மணியளவில் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபம் கிராமத்தில் உளள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் 8 மணியளவில் ஜெயலட்சுமியை கருணாநிதி அழைத்து வர சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கனிமொழி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், கனிமொழி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து கனிமொழியின் உடல் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் விக்கிரமங்கலம் போலீசார் இன்று காலை சாத்தம்பா சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு அச்சத்தில் சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது அரியலூர் மாணவி நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]